ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் டிசம்பர் 26 ஆம் தேதி அன்று மாலை மிகச் சிறப்பாக, மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. குழந்தைகள் தேவன் தங்களுக்கு தந்த தாலந்துகளை வசனங்களாக ஒப்புவித்தும், பாடல்களாக பாடியும், தேவனை மகிமைப்படுத்தி நடனமாடியும் வெளிப்படுத்தினார்கள். இதுவரை நடந்திராத வகையில் மிகவும் வித்தியாசமான முறையில் இந்த வருட கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டு பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் இன்னும் மெருகேற்றப்பட்டன. வந்திருக்கும் பெற்றோர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பெற்றோர்களுக்கு ஒரு சிறிய வினாடி வினா போட்டியும் ஆன்லைனில் நடத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற கிருபை அளித்த தேவாதி தேவனுக்கு நன்றிகளை ஏறெடு்க்கிறோம். அதேபோல இந்த நிகழ்ச்சிக்கு உற்ற துணையாக இருந்த ஆயர் பெருமக்களுக்கும் , சபை சங்க உறுப்பினர்களுக்கும், ஆலய ஊழியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மிக விசேஷமாக குழந்தைகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
Click this link to view the celebration
.jpg)
No comments:
Post a Comment