Wednesday, June 7, 2023

REPORT - 2 OF 2022

 Annual Report - part 2

 


·        ஜூலை மாதம் முதல் வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டன மேலும்  ஜூலை மாதத்தில் இருந்து ஒவ்வொரு நான்காவது வாரமும் ஞாயிறு ஆராதனையில் சண்டே கிளாஸ் குழந்தைகள் சிறப்பு பாடல் பாட கோரிக்கை வைக்கப்பட்டது.சபைகுருவும் சபை சங்க உறுப்பினர்களும் அதை ஏற்றுக்கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர். ஜூலை 31 ஞாயிறு ஆராதனையில் நம் குழந்தைகள் அழகாக பாடலை பாடி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

 



·        ஆகஸ்ட் மாதம் வகுப்புகளோடு கூட இந்திய திருநாட்டின் சுதந்திர தினமும் ஓய்வு நாள் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. 75 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் நமது குழந்தைகள் தேசியக்கொடியுடன் 75 என்ற வடிவத்தை அமைத்து இந்திய சுதந்திர தியாகிகளை போற்றினர்.

 


·        ஆகஸ்ட் 20 திருச்சியில் நடைபெற்ற Reciting Rockstars பரிசளிப்பு விழாவில் நமது ஓய்வு நாள் பள்ளி மாணவி அபிஷா பங்கேற்று பரிசினை பெற்றார்.

 


·        செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற அறுப்பின் தோத்திர பண்டிகையிலே ஓய்வு நாள் பள்ளியின் சார்பில் 2 stall வைக்கப்பட்டது. Bible gameல் அனைவரும்  உற்சாகமாக பங்கேற்றனர். மேலும் பிரைமரி வகுப்பை சேர்ந்த ஜெமிமா  வரைந்த ஓவியங்களும் கண்காட்சியாக வைக்கப்பட்டது. அதை பலரும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

 


·         Instant Bible quiz ஒன்றும் நடத்தப்பட்டது. இதனை ஓய்வு நாள் பள்ளி குழந்தைகள் சிரத்தையுடன் செய்து முடித்தனர்

 

·        செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி ஞாயிறு ஆராதனையிலே நம் குழந்தைகள் சிறப்பு பாடல் பாடி தேவனை ஆராதித்தார்கள்.

 


·        அக்டோபர் மாதம் வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டன. 23ஆம் தேதி ஞாயிறு ஆராதனையில் சிறப்பு பாடலை பாடினார்கள்.

 


·        நவம்பர் மாதம் குழந்தைகளுக்கான மாதம். ஆம் அதுவும் குழந்தைகள் தினம் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தது மிகவும் சிறப்பு. அன்றைய தினத்திலே ஆராதனையில்  வேத பகுதிகளை  Tevin & Joshna வாசித்தனர்.

 


·        சிறப்பு பாடலும் அருமையாக பாடப்பட்டது. பிறகு சண்டே கிளாஸில்  special games நடத்தப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக அன்று குழந்தைகள் தங்களுடைய தினத்தை கொண்டாடினர்.

 





·        Online test ஒன்று நடத்தப்பட்டு certificateம் பாராட்டி வழங்கப்பட்டது.

 



·        அன்றைய தினத்தில் TELC CBE SUNDAY SCHOOL என்ற Blogspot ம், நமது Church App ல் சண்டே கிளாஸ்காக தனி segment ம் உருவாக்கப்பட்டு launch செய்யப்பட்டது

 


·        Blogspot ல்  sunday class ன்  special events அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது

 


·        youtube சேனலிலும் எல்லா நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது

 


·        நவம்பர் மாதம் நடைபெற்ற Reciting Rockstars  -2 -ல் நம் குழந்தைகள் 16 பேர் பங்கேற்றனர். இதிலும் நம் பிள்ளைகள் வெற்றி பெறுவார்கள் என்று இயேசுவின் நாமத்திலே விசுவாசிக்கிறோம்.

 



·        டிசம்பர் மாதம் Children's christmas பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது உற்சாகத்தோடு குழந்தைகள் பயிற்சி பெற்றனர்

 

·        டிசம்பர் 17 அன்று கோவையில் உள்ள அனைத்து சபைகளின்  Ecumenical Christmas  Carol நிகழ்ச்சியில் நமது ஓய்வு நாள் பள்ளி குழந்தைகளின் Nativity Play மிகவும் அழகாக உணர்வு பூர்வமாக நிகழ்த்தப்பட்டது. பலரும் பாராட்டினர்.

      



அதன் விளைவாக டிசம்பர் 25ஆம் தேதி கோவை மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியிலும்  Nativity play நம் குழந்தைகள் மூலம் அழகாக சித்தரித்து காட்டப்பட்டது. We are immensely proud to share this happy news that our kids were recognised by our Coimbatore  Government officials. 

 


·        2022 ஆம் ஆண்டின் ஆண்டின் கடைசி ஆறு மாதங்களும் குழந்தைகளை தேவனுடைய வசனத்திலும் தேவ கிருபையிலும் வழி நடத்துவதற்கு இயேசு கிறிஸ்து அருளிய கிருபைகளுக்காக ஸ்தோத்திரங்களை செலுத்துகிறோம் ஆமென்

 

 


No comments:

Post a Comment

Soud & Light

 On Easter aSound & Light event was conducted by Ecumenical Churches of Coimbatore. In that event our kids witnessed it with a graceful ...