Annual Report - part 1
·
கடந்த ஒரு வருடமாக எம் ஓய்வு நாள் பள்ளியை நடத்துவதற்கு தேவன் தந்த சுகத்திற்காக பலத்திற்காக ஆசீர்வாதத்திற்காக ஸ்தோத்திரம்
· புதிய வருடத்தின் முதல் மாதத்தில் விடுமுறை முடிந்து வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
·
Beginner, Primary, Junior,
Intermediate, Senior என வகுப்புகள் பிரித்து எடுக்கப்பட்டன .பிப்ரவரி மாதமும் வழக்கம் போல வகுப்புகள் நடந்தன.
· பிப்ரவரி 27ஆம் தேதி Sis. Sheela அவர்கள் ஓய்வுநாள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினார். அவர்களது குழுவின் மூலம் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். சில activities மூலம் மனன வசனத்தை எவ்வாறு போதிப்பது என்பதை அழகாக விளக்கினார்.
·
மார்ச் மாதம் முதல் புதிய பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு தனித்தனியாக work book உடன் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டன.
·
ஏப்ரல் மாதம் குருத்தோலை ஞாயிறு பவனியில் ஓய்வு நாள் பள்ளி குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். அதன் பிறகு மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
·
மே மாதம்16 முதல் 22 முடிய ஏழு நாட்கள் நமது சபையில் SBS வகுப்புகள் நடத்தப்பட்டன.
·
வயதுப்படி வகுப்புகள் பிரிக்கப்பட்டு TELC திருச்சபையின் Child Care Ministry மூலம் கொடுக்கப்பட்ட Syllabus and workbook கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.
·
ஒவ்வொரு நாளும் General
Sessionல் Common Song,
Common Story and Common Bible Verse கற்பிக்கப்பட்டது. பிறகு வகுப்புகள் பிரிக்கப்பட்டு அந்தந்த வகுப்புகளுக்குரிய Bible story and Missionary
story ஆகியவை Proper
Teaching Aids உடன் கற்றுக் கொடுக்கப்பட்டது.
·
நிகழ்ச்சி முடிந்த பிறகு காருண்யா ஜெப கூடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவும் பரிசுகளும் வழங்கப்பட்டது மிகவும் சந்தோஷமாக ஆசீர்வாதமாக இந்த வருட SBS கடவுளின் கிருபையாலே மிக நேர்த்தியாக நடத்தி முடிக்கப்பட்டது.
·
மே மாதம் விடுமுறை முடிந்து ஜூன் மாதம் முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
·
Reciting Rockstars என்ற YouTube channel மூலம் குழந்தைகளுக்கான வேத வசனம் மனன போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஜூன் மாதம் நடைபெற்ற போட்டியில் நமது ஓய்வு நாள் பள்ளி குழந்தைகள் Tevin, Jemimma, Natalya, Princy, Havillah, Abisha, Jemimma SharonSharon
ஆகியோர் கலந்துகொண்டனர்.
·
வருடத்தின் முதல் ஆறு மாதம் வகுப்புகளும் மற்ற நிகழ்வுகளும் சிறப்பாக நடப்பதற்கு உதவிய தேவாதி தேவனுக்கு நன்றிகளை செலுத்துகிறோம்.
|
|
|
No comments:
Post a Comment